கலைச்சொற்கள் கவிதை

நல் ஓர்வு கைக்கொண்டால்
நலத்தாலே வாழ்வு செழிக்கும்

அத்தம் செல்லுங்கால் அசும்பு அகப்படின்
சித்தம் தெளிவிருந்தால் தேறலாம்

கங்குல் உறக்கமதை கணக்காய் கடைப்பிடித்தால்
அல்கல் வாழ்க்கை அருமைதானே

உலகின் பற்றில்லா மனிதருக்கு
சிற்றில் போலவே தெரியுமாம் உடல்

நீள் ஆயுள் வேண்டின் நல் மருந்தை அயில்
குரம்பையில் வசிப்பினும் தூய காழகம் பேண்

வாழ்க்கை சகடம் சால செல்ல வேண்டுமெனில்
உறவி போல் உற்சாகமாய் உழைத்தல் நலம்

ஒளவை வார்த்தையை அல்கல் பயன்று
அதன் அத்தம் பயணிப்பின் கவ்வை பயமில்லையே
-------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (22-Sep-20, 6:52 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 54

மேலே