கவனம் கவனம் கவனம்

கவனம் கவனம் கவனம் காத்திருக்கு மரணம்
மரணம் மரணம் மரணம் மாயம் செய்யும் தருணம்

உலகில் உள்ள உயிர்கள் யாவும் இதற்குள் வரணும்
உணர்வுள்ள எதுவும் இதன் உண்மையை உணரணும்
கபடம் கள்ளம் எல்லாம் கடைசி நிலையை அடையும்
கடமைக்கேற்ப அடக்கம் காருண்யமாக அமையும்

கவனம் கவனம் கவனம் காத்திருக்கு மரணம்
மரணம் மரணம் மரணம் மாயம் செய்யும் தருணம்

பணத்தின் மீது பற்றும் பாசங்காட்டும் நட்பும்
பார்த்து பதறும் தருணம் பாப கணக்கு முடியும்
பகலும் இரவும் மறையும் பரபரப்பு இன்றி காணும்
பக்குவமான நிலையை பார்க்காமல் உணர்வு அழியும்

கவனம் கவனம் கவனம் காத்திருக்கு மரணம்
மரணம் மரணம் மரணம் மாயம் செய்யும் தருணம்

உருவான உடல் கரையும் உறவும் அங்கே முடியும்
பயிர்கள் பார்த்து அழுவும் பாரியாள் பலமும் குறையும்
அடுத்த நிலையை அறியாமல் அகில பந்தம் விலகும்
ஆக்கிய நல்லது நிலைக்கும் அந்தம் வரை இருக்கும்

கவனம் கவனம் கவனம் காத்திருக்கு மரணம்
மரணம் மரணம் மரணம் மாயம் செய்யும் தருணம்

ஏட்டில் எழுதியது நிலைக்கும் ஏர் வழிதான் காக்கும்
எவ்வளவு பணம் இருந்தாலும் எளிதில் உயிர் பிரியும்
காலன் கவர நினைத்தால் கடுகு கூட வெடிக்கும்
கட்டுப்பாட்டோட வாழ்ந்தால் காலம் கடந்தும் வாழலாம்.
------- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (26-Sep-20, 5:35 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 43

மேலே