திரும்பி வா குயிலே

உயிரிழந்த
இசையானது
உனையிழந்த
இவ்வுலகம்...

உணர்விழந்த
உருவமானது
உனையிழந்த
திரைத்துறை...

பறந்து சென்ற
பாடும் நிலாவே
மறந்ததும் ஏனோ
துடிக்கும் ரசிகரை..

பகலிரவு கழித்தோம்
உன்குரலில் மயங்கி
முப்பொழுதும்
அழுகிறோம் ...

ஏங்கித் தவிக்கிறோம்
உன்திருமுகம் காண
காத்துக் கிடக்கிறோம்
உன்குயிலோசை கேட்க...

மீளாத் துயில்
கொண்ட குயிலே
இப்புவியே
அழைக்கிறது
திரும்பி வா
எங்கள் பாலுவே ...


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (29-Sep-20, 2:54 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 226

மேலே