பாடும் நிலா SP பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்
அஞ்சலி, அஞ்சலி புஷ்பாஞ்சலி
பொன்னான குரலுக்கு பொன்னாஞ்சலி
பூ போன்ற சிரிப்புக்கு நகையாஞ்சலி
நயமான நடிப்புக்கு நடிப்பாஞ்சலி
நிறைவான நடனத்துக்கு நடனாஞ்சலி
இசை மீட்டும் திறமைக்கு கவிதாஞ்சலி
இணையில்லா ஈகைக்கு இதயாஞ்சலி
குரல் பேசும் நிழலுக்கு குரலாஞ்சலி
குயில் பாடும் பாட்டுக்கு இசையாஞ்சலி
மெய்யான அன்புக்கு சரணாஞ்சலி
மிடுக்கான தோரணைக்கு ஈர்பாஞ்சலி
பாராட்டும் பண்பிற்க்கு பணிவாஞ்சலி
பார் போற்றும் அளவுக்கு புகழாஞ்சலி
உயிர் நீத்த உடலுக்கு கண்ணீராஞ்சலி
உள்ளம் யாவும் உன் நினைவாஞ்சலி