தாயவளின் வலி..

தாயவளின் வயிற்றினிலே
பத்து மாதம் நீ இருந்து
உதைத்த வலி வலிக்கவில்லை
சுகமானது அவளுக்கு..
உயிர் போய் திரும்பியது போல்
உன்னை ஈன்றெடுக்க பட்ட துயர்..
ஓர் நொடியில் மறைந்ததுவே
உன் பிஞ்சி முகம் கண்டதுவும் உன் தாயவளுக்கு..
இன்று நீ அடித்த சொல்லடியில்
போன உயிர் மீண்டும் திரும்புமா சொல் அவளுக்கு..

எழுதியவர் : தோழி... (21-Sep-11, 3:48 pm)
பார்வை : 417

மேலே