நகைச்சுவைத்துணுக்குகள் 23

என் அப்பாவுக்கு வயது 78. ஆனால் அவர் தலையிலே ஒரு நரை முடியைக்கூட பார்க்க முடியாது.

ஆச்சரியமா இருக்கே. அவர் என்ன தைலம் உபயோகிக்கிறார்?

தைலமா? அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. அவர் 30 வயசுலேயை முழு வழுக்கையா ஆயிட்டார்.
******************************
முந்தியெல்லாம் லேடீஸ் ரவிக்கையிலே முதுகுலே ஜன்னல் வெச்சி தைப்பாங்க. இப்ப ஃபேஷன் மாறிப் போச்சு.

அப்படின்னா?

இப்ப எல்லாம் முதுகுப்பக்க ரவிக்கையோட விண்டோ ஏர் கண்டிஷனரையும் அட்டாச் பண்ணி விக்கிறாங்க.
*******************************
ஏன்னா, நம்ம வீட்டிலே மூணு ட்யூப் லைட்டுகள் வேலை செய்ய மாட்டேங்கறது.

இல்லையே. ரெண்டு ட்யூப் லைட் தானே வேலை செய்யலை.

நான் உங்களையும் சேத்துச் சொன்னேன்.
************************************
நம்ம ராமு பாவம் கஷ்டப் பட்டு படம் எடுத்தானே. இப்ப எப்படி இருக்கான்?

படம் எடுத்துட்டுக் கஷ்டப் படறான்.
************************

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (4-Oct-20, 3:54 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 106

மேலே