வீழ்ந்தால் அது வரலாறு👍💐
மாற்றம் தரும்
என எண்ணி வைக்கும்
தடம் ஒவ்வொன்றும்
தரலாம் ஏமாற்றம்...
வாழ்வது மாறாதா
என நினைத்து
ஏங்கும் கண்களில்
வரலாம் கண்ணீர் ...
துன்பம் நம்முடன்
உறவாடினாலும் உறவாடட்டும்,
நம்பிக்கை என்ற ஒற்றைச் சொல் என்றும் மனதில் நிலைத்திடட்டும்
போராடி விடு
வாழ்வென்னும் போர்க்களத்தில்
வென்றால் போற்றுவார் சிலபேரு
வீழ்ந்தால் அது உன் வரலாறு..!!
செல்லும் பாதையில்
கல்,முள் கண்டு அஞ்சாதே
கால் இல்லாத மனிதர்களுக்கும்
பயணம் உண்டு மறந்துவிடாதே...
பற்றற்ற நிலை கொண்டு
இறைவன் திருவடி மட்டும்
பற்றிக்கொள்..
இங்கு நம்மால் நிகழ்வது
என்று ஏதும் இல்லை
காரணம் காரியம் இன்றி
ஏதும் நடபதில்லை...
கோபம்
மோகம்
காமம்
கொல்....
அன்பு
நட்பு
பணிவு
கொள்....
கொல்வதை கொன்று
கொள்வதை கொண்டால்
வாழ்வது மேம்படும்
என்றும்... என்றென்றும்...
ஜீவன்❣️