நட்பு

தேடினேன் ஓர் தேவதை
காண்கிறேன் நான் உனை!
காலத்தின் வேகத்தில்
கைகாட்டுதே என் வினை!

தாலாட்டும் தென்றலாய்!
பாராட்டும் வள்ளலாய்!
தோள்மீது சாய்ந்திட..
சோகங்கள் தீர்ந்திட...

பார்த்து வந்த பந்தம் இவளே!
பாசம் கொண்ட சொந்தம் இவளே!
நேசம் கொண்ட நெஞ்சம் இவளே!
வேஷம் இன்றி ஜெயிப்பதிவளே!

கண்ணில் நீர் கொண்டு
கலங்கி நிற்பேன்...
கவலை நான் கொண்டு
சுணங்கி நிற்பேன்...
கண் முன்னே இல்லாமலே
கரம்சேர்த்து கொள்ளாமலே
காற்றில் சுவாசம் ஏந்தி வந்து
ஆற்றி மனதை தேற்றி வைப்பாள்!
ஆனமட்டும் எனைமாற்றிவைப்பாள்!

சிறுமிகளாய் இருந்த போது
சேர்ந்திட்ட பந்தமிது...
சீரோடு சென்றபோது
சிதறிவிட்ட வண்ணமிது...
போராடும் வாழ்வு தாண்டி
பொறுமை கொள்ளும் நேரமிது
மறுஜென்மம் என்பது போல்..
உனைச்சேர்த்தான் ஆண்டவன்.
உணர்கிறேன் நானடி!
உண்மையும் இது தானடி!

நான் சோர்ந்து போகையில்..
வான் நோக்க சொல்கிறாய்!
நான் மௌனம் கொள்கையில்
என்னை பேச வைக்கிறாய்!
ஏதாகிலும் உந்தன் மனம்..
எப்போதுமே நேர்கோட்டிலே!

உன் நெஞ்சிலே எனக்கோர் இடம்
நான் திரிகிறேன் இறுமாப்பிலே!
இனி போகும் தூரங்கள்
இனிமையே தானடி!
இறைவன் முன் நான் கேட்பது
உன் அன்பு தானடி!
வாழ்க வளமுடன் நீயடி!

எழுதியவர் : (6-Oct-20, 5:12 am)
சேர்த்தது : krishna viji
பார்வை : 490

மேலே