கானகத்தில் ஒளியாட்டம்
கானகத்தில் ஒளியாட்டம்
சுழித்து ஓடும்
சிற்றாற்றில்
சிதறி விழும்
சிதறல்களின்
பளிச்சிடும் வெளிச்சமும்
சிரிப்பு சத்தங்களும்
அந்த கானகத்தை
கலகலப்பாக்க
கரையருகே நின்றிருந்த
மரங்கள் எல்லாம்
தலையசைத்து
இரசிக்க
பாறை சந்துகளில்
பதுங்கி இருந்த
நண்டுகள் எல்லாம்
தலை எட்டி
பார்க்க
ஆவலாய் நீருக்குள்
இருந்து வெளி
வந்த மீன்கள்
உடலை வளைத்து
நெளிந்து உள்ளுக்குள்
திரும்ப
அதன் உடல் மினுமினுப்பு
சூரிய ஓளி பட்டு
மின்னி மறைய
மொத்தத்தில் மின்சாரம்
இல்லாமல்
மின் மினி
வெளிச்ச புள்ளிகளை
அந்த நீர் வீழ்ச்சியும்
அதற்குள் இருந்த
மீன்களும்
கானகத்துக்குள்
ஒளியாட்டம் நடத்தி
கொண்டிருக்கின்றன