நான் பாட்டிங்கிறது எனக்குத் தெரியாதா

பாட்டிம்மா, என்னைப் பாக்க ஒரு பையன் வந்தானா?
@@@@@
ஒருத்தன் வந்தான்டா. நல்லா செவப்பா இருந்தான்.
@@@@@@@
சரி. அவம் பேரைக் கேட்டயா?
@@@@@@
அவன் என்னவோ ரண்டு வார்த்தை சொல்லி 'பாட்டி', 'பாட்டி', 'பாட்டி'னு மூணு தடவை சொன்னான். நான் பாட்டிங்கிறது எனக்குத் தெரியாதா? அவஞ் சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கணுமா?
@@@@@@
ஓ.... அவனா. அவன் சேட்டுப் பையன். அவன் பேரு 'ஹீராலால் பாட்டி (Heeralal Bhati)* அவனை நாங்க 'பாட்டி'னுதான் கூப்பிடுவோம்
@@@@@
ஆமாம்டா நரேச்சு. அவன் கீராலாலு பாட்டினுதான் சொன்னான். 'பாட்டி'யை மட்டும் மூணு தடவை சொன்னான்.
@@@@@@@
அவன் எங்ககூடப் படிக்கிற பையன்.. நாங்க எல்லோரும் அவனை 'பாட்டி', 'பாட்டி'னுதான் கூப்புடுவோம்.
@@@@@@@
அதென்னடா நரேச்சு ஆம்பளப் பையனைப் போயி 'பாட்டி'ன்னு கூப்படறது?
@@@@@@@
பாட்டி அவம் பேரு 'பாட்டி'ம்மா.. 'பாட்டி',யப் 'பாட்டி'னுதானே கூப்புடணும்.
@@@@@@
நல்ல பேருடா கீராலாலு பாட்டி.
■■■■■■■■■■■■■■■■■■■■■■◆◆
Heeralal Bhati ஒரு விளம்பரத்தில் பார்த்த பெயர்.
Heera = டைமோண்ட்
Lal = beloved, red colour, lovely.
Bhati = surname.

எழுதியவர் : மலர் (6-Oct-20, 7:19 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 82

மேலே