தொழுகை

தொழுகை

வெண்பா

ஈசன் அவனே உலகோரின் தெய்வமாம்
நேசிப்பர் இந்துசிவ மென்றே -- முசல்மான்கள்
அல்லா வெனவும் கிருத்துவர் கர்த்தனெனச்
சொல்லி வணங்குவர் காண்

அவரவர் தெய்வம் அவரும் வணங்க
எவர்க்குமே இல்லையாம் தொல்லை -- சுவரின்
எதிரில் தரைவான் வணங்கும் இசுலாம்
விதியாம் கிருத்து மதே

குறட்பா

அருவ உருவையும் இந்துக் களுக்கு
தரும ரிஷிமுனி சொன்னார்

மற்ற மதமாரா யாதீர் உலகே
உரித்திட வெங்காய மேது



எழுதியவர் : பழனிராஜன் (7-Oct-20, 7:28 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 361

மேலே