மாட்டைப் பாரு - மாட்டைப் பாரு

ஏன்டி கம்முலா...
@@@@@@
சித்தி நான் கம்லா. கம்முலா இல்லை.
@@@@
உம் பேரு 'கமலா'தானே!
@@@@@
போன மாசம் வரைக்கும் கமலா. இந்த மாசம் ஒண்ணாந் தேதிலிருந்து நான் 'கம்லா'.
@@@@@@@
சரிடி கம்முலா. உம் பொண்ணை என்னன்னு கூப்புடற?
@@@@@@@
'கெளசி'.
@@@@@@@@
என்னது உம் பொண்ணுப் பேரு 'மாட்டைப் பாரு'வா? தமிழ் அர்த்தம் சரி தானா? உந் தம்பியைக் கேட்டேன். 'கவ்' (Cow) ன்னா 'மாடு' -ன்னு சொன்னான். 'சீ' (see) - 'பாரு' (பார்)ன்னு சொன்னான். அவன் சொன்னது சரியாடீ கம்முலா.
@@@@@@
ஆங்கில 'Cow see)யா இருந்தா அவஞ் சொன்னது சரி தான். எம் பொண்ணோட முழுப்பேரு 'கெளசிகா' (Kaushika = honey)..நாங்க செல்லமா 'கெளசி'ன்னு கூப்புடுவோம்.
@@@@@@
அப்பிடியா? தமிழ்ப் பேரைப் பிள்ளைங்களைக்கு வைக்கிறது கேவலமா?
@@@@@@@
அப்பிடித்தான் சித்தி நம்ம தமிழ் மக்கள் நெனைக்கிறாங்க.
@@@@@@
இந்திப் பேரை வச்சுட்டா இந்திக்காரங்க உங்கள நீங்களும் இந்திக்காரங்கனு ஏத்துக்குவாங்க. சொந்த மொழில பேரு வைக்கக்கூட துப்பில்லாத மொழி தமிழ்னு நெனைக்கமாட்டாங்களா?
@@@@@
அதைப் பத்தியெல்லாம் தமிழர்கள் கவலைப்படறதில்ல. தன்மானம் எங்க விக்குதுனு கேக்கும் நிலைல இருக்கிறாங்க. பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்களை வைக்கிறதப் பெருமையா, ஒரு சாதனையா நெனைக்கிறாங்க.
@@@@@@@
அதான்டி தமிழ் தெரியாத இந்திக்காரங்க எல்லாம் தமிழ் நாட்டிவ வேலைல சேரறாங்க. நம்ம பசங்க வேலை இல்லாம இருக்கிறாங்க.

எழுதியவர் : மலர் (8-Oct-20, 10:04 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 52

மேலே