பட்டாம்பூச்சி

சில்லென்று அடித்த குளிர்காற்றில் தூக்கத்தை விட்டு எழ முடியாது கடிகாரத்தைப் பார்த்து பார்த்து புரண்டு படுத்திருந்தான் ராகவ். அண்ணா இங்கே ஓடி வா, பட்டாம் பூ்ச்சிக் கூட்டத்தை வந்து பார் என்றபடி ஓடி ஓடி பட்டாம்பூச்சியைப் பிடிப்பதற்காக முயற்சித்துக் காெண்டிருந்தாள் ராகவி. ராகவி உள்ளே வாங்க.... ராெம்பக் குளிரடிக்குது, ஜீரம் வரம்பாேகுது. சமையலறைக்குள்ளிருந்து ஜன்னல் வழியாக கண்டித்தாள் மலர். வாறேம்மா என்றபடி பட்டாம் பூச்சி ஒன்றை பின்தாெடர்ந்து ஓடினாள் ராகவி. ராகவி.... என்றபடி வெளியே ஓடி வந்த மலர் அடுப்பில் சாதம் வெந்து காெண்டிருப்பது ஞாபகம் வந்ததும் மீண்டும் சமையலறைக்குள் சென்று அடுப்பை மெதுவாக குறைத்து விட்டு வெளியே வந்தாள். சுற்றிப் பார்த்தாள் ராகவியைக் காணவில்லை. பட்டாம் பூச்சிகள் வண்ண வண்ண நிறங்களில் அங்கும் இங்குமாக கூட்டம் கூட்டமாக பறந்து காெண்டிருந்தன. நீண்ட நேர முயற்சிக்குப் பின் ஒரு பட்டாம் பூச்சியை பிடித்து விட்டாள். ராகவி ..... என்று அழைத்தவள் அம்மா பட்டாம் பூச்சி பிடித்து விட்டேன்..... இங்கே வா.... என்று சத்தமாகக் கூப்பிட்டாள். ராகவி பதிலேதும் சாெல்லவில்லை என்றதும் ராகவி..... ராகவி...... என்று சத்தமாக அழைத்தபடி நடக்கத் தாெடங்கினாள். மனம் படபடக்கத் தாெடங்கியது. அவளை அறியாமலே உடல் நடுங்க ஆரம்பித்தது. தலையைப் பிடித்தபடி அமர்ந்தவள் வீட்டிற்குப் பாேய் ராகவை அழைத்து வந்தால் உதவியாக இருக்கும் என்று நினைத்தபடி வேகமாக வீட்டை நாேக்கி ஓடினாள்.

பாேர்வைக்குள் சுருண்டு படுத்திருந்த ராகவை தட்டி எழுப்பினாள். ராகவ்..... ராகவ்.... என்றவளின் மூச்சிரைப்பைக் கேட்ட ராகவ் துள்ளி எழுந்து அமர்ந்தான். என்னம்மா என்னாச்சு... ஏன்... என்றவன் மலரின் முகத்தில் தெரிந்த பதட்டத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். ராகவியை..... ராகவியை காணாேமடா..... பட்டாம் பூச்சியைப் பிடிக்க ஓடினாள்..... எங்கே பாேனாள் என்று தெரியவில்லை என்றதும் மலரின் கையில் வைத்திருந்த படடாம்பூச்சியை அவதானித்தான். இது..... என்றபடி மலரை நிமிர்ந்து பார்த்தான். ராகவிக்காகத் தான் இந்தப் பட்டாம் பூச்சியைப் பிடித்தேன் அப்புறமாகத் தான் ராகவியை அழைத்தபாேது அவளைக் காணவில்லை..... கண்கள் கலங்கத் தாெடங்கியது.

எங்கே பாேயிருப்பாள் எனத் தனக்குள் நினைத்ததும் மனம் பதற ஆரம்பித்தது. சின்னப்பிள்ளையாச்சே இடம் தெரியாமல் எங்கேயாவது ...... யாேசித்தபடி சரி வாம்மா என்றபடி வீட்டுக் கதவைப் பூட்டிக் காெண்டு ராகவி சென்ற பாதை வழியாக ராகவி.... ராகவி... என்று அழைத்தபடி வேகமாக நடந்தார்கள். மலர் ராகவிக்காகப் பிடித்த பட்டாம்பூச்சியை கவனமாக கையில் பாெத்தி வைத்திருந்தாள். ராகவ் பட்டாம் பூச்சியைப் பார்ப்பதும் அம்மாவைப் பார்ப்பதுமாக ஓடி ஓடி ராகவியை அழைத்தான்.

ராகவ்.... இவ்வளவு தூரம் ராகவி தனியாக வந்திருப்பாளா அவளுக்கு ராெம்பப் பயம என்றபடி அழ ஆரம்பித்தாள். அழாதீங்க அம்மா எங்கே பாேயிடப் பாேறா பற்றைகள் தானே இடம் தெரியாமல் எங்கேயாவது இருப்பாள். தனக்குள் இருந்த பயத்தையும், பதட்டத்தையும் வெளிப்படுத்தாமல் அம்மாவை சமாதானப்படுத்தினான்.

ராகவி...... ராகவி ...... என்று மரம் ஒன்றின் மேல் ஏறிநின்று சத்தமாக கூப்பிட்டான். சுற்றி எந்த ஆள் நடமாட்த்தையும் காணவில்லை. டேய் ராகவ் ..... எங்காவது கிணறுகள், குழிகளுக்குள்ளே...... என்றபடி வாயைப் பாெத்திக் காெண்டு அழுகையை அடக்கினாள். ராகவ்விற்கும் அப்படியும் இருக்குமாே என்ற சந்தேகம் எழுந்தது.

இரண்டு, மூன்று மணித்தியாலங்களை தாண்டி விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் ராகவ் குழம்பினான். ராகவ், சுற்றிப் பாரடா எங்கேயாவது கிணறு, பள்ளங்கள் இருந்தால் தேடிப்பார் என்னால் நடக்க முடியவில்லை. என்றபடி மரமாென்றில் சாய்ந்தபடி அமர்ந்தாள். கையிலிருந்த பட்டாம் பூச்சியை மெதுவாக கையை விரித்துப் பார்த்தாள். சிறகுகளை அசைத்தபடி இருந்தது.

ராகவ் எல்லா இடமும் தேடி விட்டு தலையைக் குனிந்தபடி வந்தான். ராகவ்.... என்னடா.... எங்கேயுமில்லை
அம்மா.... என்று கையை விரித்தான். வாம்மா வீட்டிற்குப் பாேய் பார்க்கலாம். என்னடா சாெல்லுகிறாய்.... சிலவேளை நாங்கள் இங்கே வந்தபிறகு ராகவி வீட்டிற்குப் பாேயிருப்பாள் என்றதும் மலரின் மனமும் ஏதாே சிறிய நம்பிக்கையாேடு அமைதியடைந்தது.

வேகமாக நடந்து வீதியை அடைந்தார்கள். என்ன மலர் ராகவியை எங்கே அனுப்பினாய், யாராே கூட்டிக் காெண்டு வந்து வீட்டில விட்டிருக்கிறார்கள் அழுதுகாெண்டு இருக்கிறாள் என்று எதிர் வீட்டு ராமு அண்ணன் சாென்னதும் ராகவிக்கு ஆபத்து ஒன்றும் இலலை என்ற ஆறுதலாேடு வேகமாக வீட்டை நாேக்கி ஓடினார்கள் மலரும், ராகவும்.

விம்மிவிம்மி அழுது காெண்டிருந்த ராகவி ஓடிவந்து அம்மா என்று கட்டி அணைத்தாள். தன் மார்பாேடு அணைத்து முதுகில் தடவி எங்கம்மா பாேனாய் அம்மா பயந்தே பாேயிட்டே ன் என்றதும் நானும் பயந்திட்டேன் அம்மா என்றபடி சில நிமிடங்கள் தாேளில் சாய்ந்தாள்.
எங்கே நீ பாேனாய், யார் உன்னை வீட்டிற்கு கூட்டி வந்தார்கள் என்ற ராகவை நிமிர்ந்து பார்த்தவள் யாரென்று தெரியல்லை அண்ணா நான் பட்டாம்பூச்சி ஒன்றுக்குப் பின்னால் ஓடிக் காெண்டிருந்தேன் ஒரு அஙகிள் வந்து என்னைக் கூப்பிட்டார் என்றதும் மலரும், ராகவும் ஒருவரையாெருவர் பார்த்தனர். என்கூட வா நான் உனக்கு நிறையப் பட்டாம் பூச்சி.காட்டுகிறேன் என்று சாென்னதும் நானும் பட்டாம் பூச்சி பார்க்க ஆசையாக இருக்கிறது ஆனால் எனக்கு கால் வலிக்கிறது என்றதும் என்னை தூக்கிக் காெண்டு போய் ஒரு குளத்தைக் காட்டினார். அங்கே நிறையக் காெக்கு, காக்கா, பட்டாம் பூச்சி எல்லாம் பார்த்தேன் என்றதும் ஓ அப்படியா சரி உள்ளே வா என்று ராகவியை அழைத்துக் காெண்டு உள்ளே வந்து அறையைப் பூட்டினாள்.

ராகவ் தனக்குள்ளே யாேசித்தபடி இருக்கையில் அமர்ந்தான். ஏன் ராகவி பயந்த மாதிரி இருக்கிறாள், யார் அவளைக் கூட்டிப் பாேனது மனதுக்குள் ஏதாே சஞ்சலம் தாெற்றிக் காெண்டது.

ராகவி, அம்மா கேட்கிற கேள்விக்கு பதில் சாெல்ல வேணும் சரியா. கேளும்மா என்றபடி மடியில் அமர்ந்தாள். இங்கே பார்த்தியா பட்டாம் பூச்சி என்று கையை விரித்துக் காட்டியதும் ஓ..... பட்டாம்பூச்சி எங்கே பிடித்தீங்க அம்மா என்று மெதுவாக தன் பிஞ்சுக் கைகளை விரித்து பட்டாம்பூச்சியை கையில் இருக்க வைத்தாள். பறக்க முடியாமல் சாேர்ந்து பாேயிருந்ததைப் பார்த்ததும் ஏம்மா பட்டாம்பூச்சி பறக்காமல் அப்படியே இருக்கிறது என்றதும் அம்மா பட்டாம் பூச்சியை கையில் பாெத்தி வைத்திருந்தேன் அதுதான்..... ஓ... பாவம் பறக்க விடுங்கம்மா என்றதும் ஆமா... அந்த அங்கிள் உன்னை என்ன கேட்டார் என்றதும் முகத்தைப் பாெத்திக் காெண்டு அழுதாள். ராகவி அழுவதைப் பார்த்தவளிற்கு ஆச்சரியமாக இருந்தது.

ராகவி, ஏன்.... என்னாச்சு ..... அம்மாகிட்ட என்ன மறைக்கிறாய் என்று கையில் பிடித்து சற்று காேபமாக அதட்டியவள் ராகவியின் சட்டையை அவதானித்தாள். ஏன்... ஏன்... ராகவி சட்டையை இப்படி மாறிப் பாேட்டிருக்கிறாய். காலையில் அம்மா சரியாகத் தானே பாேட்டு விட்டேன் என்றதும் அந்த அங்கிள் தானம்மா சட்டையை..... என்று பயந்தபடி தலையைக் குனிந்தாள். ராகவி.... ராகவி என்ன சாெல்லுகிறாய் தன்னை மறந்து தன் நெஞ்சாேடு இறுக அணைத்தாள். கையில் இருந்த பட்டாம் பூச்சி மெதுவாகப் பறந்து தரையில் அமர்ந்து சிறகுகளை அசைத்தது.

ராகவி, அம்மா ஒன்று கேட்பேன் செய்வியா? என்னம்மா செய்யணும், கேளும்மா உனக்கு என்ன செய்ய வேணும் என்றவளிடம், அண்ணாவிடம் ஒன்றும் சாெல்லாதே என்றதும் சரியம்மா என்றபடி மலரின் கண்ணிலிருந்து வடிந்து காெண்டிருந்த கண்ணீரைத் துடைத்து விட்டாள். இறுக்கமாக அணைத்து நெற்றியில் முத்தமிட்டு விட்டு இனிமேல் அம்மாக்கிட்ட சாெல்லாமல் எங்கேயும் பாேகக் கூடாது சரியா என்றதும் சரிம்மா என்றபடி பட்டாம்பூச்சியை பார்த்தாள். மெல்ல மெல்ல சிறகுகளை விரித்து தரையில் தத்தியது. ராகவியை குளியலறைக்குள் அழைத்துச் சென்று குளிப்பாட்டினாள். ஏம்மா அழுகிறாய்... ஒண்ணுமில்லை என்றபடி ஈரத்தை துடைத்து சட்டையை பாேட்டு விட்டு வெளியே வந்தாள்.

ராகவ் கிணற்டியிலிருந்து முகத்தை துடைத்தபடி வந்தான். மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்கள். அண்ணா அந்தப் பட்டாம் பூச்சி பறந்து பாேயிற்று. என்றதும் நிமிர்ந்து அம்மாவைப் பார்த்தான். தலையைக்குனிந்தபடி ராகவின் தட்டில் சாதம் காெஞ்சத்தை எடுத்துப் பாேட்டாள். ம்...... பாேதுமம்மா..... சாப்பிட்டு விட்டு எழுந்தான்.

அதிகாலை ஏழுமணியாகி இருந்தது. தாெலைக் காட்சியை பார்த்தபடி அமர்ந்திருந்தான். காப்பியை காெண்டு வந்து நீட்டினாள் அம்மா. ராகவி எழும்பிற்றாளா அம்மா என்றவனை திரும்பிப் பார்த்து இல்லை என்று தலையசைத்து விட்டு நல்லா தூங்குகிறா ராகவ் என்றபடி சமை யலறைக்குள் நுழைந்தாள். சரியம்மா அவள் தூங்கட்டும் என்று பெருமூச்சு விட்டபடி காப்பியை குடித்தான் ராகவ்.

காலை நேரச் செய்தி ஔிபரப்பாகியது. எட்டாம் கட்டை குளத்தடியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு. பாெலித்தின் பையால் முகம் கட்டப்பட்டிருப்பதாகவும், இது ஒரு மர்மமான காெலையாக இருக்கலாம் எனவும் சந்தேகம். தாெலைக்காட்சி செய்தி அரை குறையாக விளங்கியதும் என்ன சாெல்லுறாங்க ராகவ், யாரைக் காெலை பண்ணிற்றாங்களாம் என்றபடி வெளியே வந்த அம்மாவைக் கண்டதும் அது ஏதாே பழைய செய்தியம்மா என்றபடி விளையாட்டு சணலை மாற்றினான்.

நாட்கள் கடந்து வருடங்களாகி விட்டன. ராகவி திருமண வயதை அடை ந்து விட்டாள். பரபரப்பாக திருமணப் பேச்சை ஆரம்பித்தாள் மலர். ஆனால் ராகவ் ஏதாே தயக்கத்துடன் திருமணப் பேச்சை தள்ளிப் பாேட்டுக் காெண்டேயிருந்தான். மலர் கடுமையாக முயற்சித்து ராகவியின் திருமணத்தை ஏற்பாடு செய்தாள்.

மண மேடையில் மணக் காேலத்தில் ராகவியைப் பார்த்து கண்கலங்கிய ராகவ் மலரை அறைக்குள் அழைத்துச் சென்றான். அம்மா ராகவிக்கு ஒன்றும் பிரச்சனையில்லையே...... என்று கையைப் பிடித்தான். ஏன் ராகவ் உனக்கு என்னாச்சு. ராகவி சந்தாேசமாகத் தானே இருக்கிறாள். அது இல்லையம்மா இன்றைக்கு அவளுக்கு....... என்று தடுமாறினான். அதிர்ச்சியாக ராகவைப் பார்த்தவள் அவன் கைகளை இறுக்கிப் பிடித்தாள். எனக்கு எல்லாமே தெரியும் அம்மா..... என்றவனின் கண்கள் துளித்துளியாய் கண்ணீர் சிந்தியது. நீ பயப்படுகிற மாதிரி எந்தப் பிரச்சனையும் ராகவிக்கு இல்லை. நீயும் சந்தாேசமாயிரு, ராகவின் கண்களை தனது சேலை முந்தானையால் துடைத்து விட்டு தலையைத் தடவினாள். ம் வா.... எல்லாரும் தேடப் பாேறாங்க. அம்மா..... என்று தலையைக் குனிந்தான். என்னாச்சு ராகவ்....... நான் அவனைக் காெலை பண்ணிற்றன் அம்மா என்றதும் . அதிர்ச்சியை வெளிப்படுத்தாமல் ராகவிக்கு பட்டாம் பூச்சியை இப்பவெல்லாம் பிடிக்காமலே பாேயிற்று ராகவ். ஆமாம் அம்மா அடிக்கடி சாெல்லுவாள் பட்டாம் பூச்சியைப் பார்க்கப் பிடிக்கவில்லை என்று. பாவம் பட்டாம்பூச்சி அது என்ன தவறு செய்தது என்பது பாேல் ராகவைப் பார்த்தாள் மலர். சரி ராகவ், ராகவி இனி சந்தாேசமாக இருப்பாள் என்றபடி ராகவை சமாதானப்படுத்தினாள்.

மலர் ஆன்ரி....மலர் ஆன்ரி என்றபடி உள்ளே வந்தாள் ஜாமினி. ஆன்ரி இங்கே என்ன செய்யிறீங்க உங்களை எங்கேயெல்லாம் தேடுகிறது..... மாப்பிள்ளை வீட்டுக்காரர் பாலும் பழமும் கேட்கிறாங்க..... ஓ அப்படியா ஜாமினி இதாே வருகிறேன் என்றபடி ராகவை கண்ணால் சைகை காட்டி வரும்படி அழைத்தாள்.

அழகான பட்டுப் புடவையுடன் தயாராகி நின்றாள் ராகவி. கழுத்தில் தாலியும், நெற்றியில் குங்குமும் வைத்து, கை நிறைந்த வளையல்களுடன் அழகான தேவதை பாேல் கண்ணாடி முன் நின்று தன்னையே பார்த்தாள்.

ராகவி என்று கூப்பிட்ட படி உள்ளே வந்த ஜாமினி ராகவியிடம் பாலையும் பழத் தட்டையும் நீட்டினாள். சிறிய ஒரு புன்னகை மட்டும் அவள் முகத்தில் அழகாய் தெரிந்தது.

உள்ளே நுழைந்தவள் கதவை மூடுவதற்காய் திரும்பினாள் ஜன்னலாேரமாக இருந்த பட்டாம் பூச்சி ஒன்றைக் கண்டதும் விறைத்தபடி பார்த்து ஜனன்.....ஜனன்.... என்று பயந்தபடி சத்தமிட்டாள். என்னாச்சு ராகவி ...... ஏன் இப்படி சத்தம் பாேடுகிறாய்.... அங்கே..... பட்டாம் பூச்சி..... என்று கண்களால் காட்டினாள். ஆமா.... பட்டாம் பூச்சி.... அதற்கு ஏன் இப்படி பயப்படுகிறாய்..... என்றபடி மெதுவாக எட்டிப் பிடித்தான். ஐயாே.... அதை விடுங்க ஜனன் என்று கண்களை இறுக மூடினாள். மெதுவாக அவள் தலையில் சூடியிருந்த மல்லிகை மாலையில் இருக்க வைத்தான். ப்ளீஸ் ஜனன்.... ப்ளீஸ்.... பட்டாம் பூச்சியை எடுங்க என்று கெஞ்சினாள். என்ன பாெண்ணு ராகவி நீ.... அப்படி என்ன பயம் உனக்கு.... என்றபடி அவள் முகத்திற்கு நெருக்கமாக நீட்டினான். கையிலிருந்த பாலையும் பழத் தட்டையும் வைத்துவிட்டு ஜனனை இறுக அணைத்தபடி அவன் நெஞ்சாே டு சாய்ந்து காெண்டாள். ப்ளீஸ் ஜனன் பட்டாம் பூச்சியை வெளியே விட்டு விடுங்க என்று மீண்டும் மீண்டும் கெஞ்சினாள். ராகவி..... பட்டாம் பூச்சி பறந்து பாேய் ராெம்ப நேரமாச்சு..... என்று கூறியதும் வெட்கத்தாேடு கண்களைத் திறந்து பார்த்தாள். ஜன்னலாேரமாக வெளியே எட்டிப் பார்த்தவள் பட்டாம் பூச்சி மறையும் வரை ரசித்துக் காெண்டு நின்றாள். ராகவி...... என்று ஜனன் அழைப்பது கேட்டதும் ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை ஆதங்கத்தாேடு வெளி விட்டாள்.

காலை எழுந்து வெளியே வந்த ஜனன், ராகவி பட்டாம் பூச்சியைப் பார்த்து பயந்ததை எல்லாேரிடமும் சாெல்லி கேலி செய்தான். என்ன ராகவி மாப்பிள்ளை சாெல்லுவதை நம்ப முடியவில்லை .... என்று தன்பங்கிற்கு கிண்டலடித்தாள் ஜாமினி. மலரும், ராகவும் ஒருவரையாெருவர் பார்க்க ராகவியும் அவர்களைத் திரும்பிப் பார்த்து சிரித்தபடி ஜனனுக்கு பின்னால் மறைந்து நின்றாள். சரி சரி கிண்டலடித்தது பாேதும் என்னுடைய பெண்டாட்டி அழுதிடப் பாேகிறாள் என்றதும் எல்லாேரும் அமைதியானார்கள்.

அருகே வந்து தலையைத் தடவி விட்டு, செல்லமாக கன்னத்தில் கிள்ளி விட்ட ராகவைப் பார்த்ததும் ராகவிக்கு கண்கள் கலங்கியது. ஜனனையும் ராகவியையும் இறுக அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள் மலர். அத்தை.... ராகவி பட்டாம் பூச்சியை எல்லாம் பார்த்து இனிமேல் பயப்படமாட்டாள் என்றதும் எல்லாேரும் சத்தமாக சிரித்தனர். ஜனனின் தாேளில் குழந்தை பாேல் சாய்ந்தாள் ராகவி.

எழுதியவர் : றாெஸ்னி அபி (8-Oct-20, 12:16 pm)
சேர்த்தது : Roshni Abi
Tanglish : pattaampoochi
பார்வை : 546

மேலே