உன்மீது நான் கொண்ட காதல் அளவு
என்மீது நீ கொண்ட காதல் எவ்வளவோ
சொல்வாயோ கண்ணே என்றேன்
அதற்கவள் சொன்னாள்.....
கடலளவு கண்ணா என்றாள் பின்
இல்லை இல்லை அது கடலைக் காட்டிலும்
பெரியது ஏனென்றால் கடல் கூட
வற்றிடுமே ஒரு நாள் ....
காணாத காற்றாய் காற்றளவு ?
என்று நினைத்தேன்.... காற்றும் ஒரு நாள்
இல்லாமல் போகலாம் ..
பின்னர்..... அன்பே உன்மீது
நான் கொண்ட காதல்
இந்த வானளவு நீலவானளவு என்றாள்
ஏன் என்றேன்... அதற்கவள்
கொஞ்சமும் தயங்காது இப்போது
சொன்னாள் ....'அன்பே ஆகாயம்
அளக்க முடியாதது ... அதுபோல்
உன்மீது நான் கொண்ட காதல்
என்றும் புனிதமானது அளந்திட
முடியாதது என்றாள் ...
என்னை ஆனந்த பரவசத்தில் ஆழ்த்தி