உன் கேள்விக்கு பதிலாய்

கடந்துப்போன காலங்கள்
கழுவிப்போன

பல நிகழ்வுகளுள் எனக்குள்
நீயும் கரைந்து போனாய்

நீ மட்டும் எப்படி இன்னும்
அப்படியே இருக்கின்றாய்

என்ற உன் பார்வைக்கு

மாற்றம் ஒன்றே மாறாதது
என்பதை பொய்யாக்க

முயற்சிக்கின்றேன் என்பதை
சொல்லி மெல்ல நகைத்தேன்

உன் கேள்விக்கு பதிலாய்

எழுதியவர் : நா.சேகர் (14-Oct-20, 9:28 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 233

மேலே