சாமி சும்மா விடாது

சாதிகள் எப்போதும்
சமமாக அமராதிருந்தாலும்
சாதிக்க பிறந்ததுபோல்
சிம்மாசனம் ஏறும்
சாதித்துக் கொள்ளும்

சாமானிய மக்களைத் தான்
சாக்கடையில் தள்ளி
சாகசம் புரிவதற்கு
சாத்தானாக மாறும்
சன நாயகத்தை சீரழிக்கும்

சட்டத்தின் முன் எல்லோரும்
சமமென்று சொன்னாலும்
சரித்திரம்படைப்பதோ
சண்டியரும், அரசியலாரும் தான் ,
சமரசம் பேசுவதோ
சுடலையில் தான்

சோற்றுக்கு இல்லாம
சாகும் மக்களிடமா
சொல்லாதிக்கத்தைக் காட்டுவது !
சொன்னால் வெட்கம்
சொல்லாவிட்டால் துக்கம்
சாமி சும்மா விடாது.

எழுதியவர் : கோ. கணபதி. (16-Oct-20, 7:47 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : saami summa vidathu
பார்வை : 32

மேலே