நீ நல்லவனா கெட்டவனா

கொற்றவன் தந்த கொடை போல
கொரோனா தொற்றைக்
கொடுத்து உலகிலுள்ள மக்களைக்
கொன்று குவிக்கும் இறைவா !
கொடுக்காமலேயே நீ
ஒதுங்கி இருந்திருக்கக் கூடாதோ !

சாவைத் தடுப்பது போல் இறைவா
சாகசம் நீ புரிந்ததாய்க் காட்டி
சாகடித்த மக்கள் ஏராளம்,
சாகாத மக்களுக்கு பணி ஓய்வு தந்து
சம்பளமும் கொடுத்து ,சாகாமலேயே
சொர்க்கத்தைக் காண வைத்ததும் உனது
சாதனை தானே !

தொப்புள் கொடி உறவு போல
தொற்றிய கொரோனா சுடுகாடு வரை
தொடர்ந்து வந்து உயிரை பறித்ததும் ,
தனி மனிதன் தன்னைக் காத்துக் கொள்ள
தனித்து இருத்தலும், முகக் கவசம் அணிவதும்
தொடர் கதையாக்கி

மீதமுள்ள வாழும் மக்களை காத்து
மகிழ வைத்த மாயவனே !
மீண்டு வந்த மக்களின் பணிகளை
முடக்கி, வாழ்வாதாரத்தை பறித்ததால்
மரணத்தைத் தழுவும் நிலையிலுள்ள
மக்களுக்கு நரகத்தையும் காட்டிய
மாயவனே, நீ நல்லவனா ? கெட்டவனா ?

எழுதியவர் : நீ நல்லவனா ? கெட்டவனா ? (16-Oct-20, 7:50 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 52

மேலே