மீண்டும் பிறக்கலாம்
"இவ்வுலகில்,
நேற்று சிலர் சென்றிருக்கலாம்,
இன்று பலர் வந்திருக்கலாம்,
அதில் ஒரு சிலர் மக்கள் மனதில்
நீங்காமல் நிலைத்திருக்கலாம்,
அவர்களில் ஒருவர் நமதருமை
'அப்துல் கலாம் அவர்கள்' என
என்றென்றும் நாம் பெருமையுடன்
நினைத்து, இருக்கலாம்.
குழந்தை 'உள்ளம்'! அறிவில் 'வெல்லம்!'
நம்நாடு தந்த 'அருந்தவ செல்வம்',
இன்று எங்கே என கண்ணீரும் வடிக்கலாம் ,
ஆனால் என்ன செய்ய ?
'கொடிய விதி '!
அதற்கும் அடி சறுக்கலாம்,
அவரை நம்மிடம் இருந்து பிரிக்கலாம்,
நாமும் அந்த கொடுமையை மறுக்கலாம்,
உண்மை நிலை கண்டு துடிக்கலாம்,
பாருங்கள், இந்நந்நாளில் அனைவரும்
துவண்ட நம் மனங்களை தேற்றலாம்,
வாருங்கள்! இப்பொன்னாளில் அவர் கண்ட
கனவு படி வாழ்வை மாற்றலாம்,
'உழைப்பு, உயர்வு, உன்னதம்,'
கொண்டு செழிக்கலாம் ,
யார் கண்டார்கள்?
ஒருவேளை இதையெல்லாம் கண்டு
அவர் ஆத்மா சிரிக்கலாம்,
புதிய ஆசை கனவுகளோடு மீண்டும் மீண்டும்
நம்மிடையே பிறக்கலாம்!."
LAKSHIYA