எண்ணத்தில் மிதப்பது

பணம் உள்ளவர்க்கு
பண்டிகை உண்டு
பரம ஏழைகளுக்கு ?
வசதிகள் இருப்பவர்க்கு
விழாக்கள் வந்து போகும்
வீதியில் வசிப்பவர்க்கு ?

கொண்டாடி
மகிழ்வது
தவறென
வாதிடவில்லை !
திண்டாடும் மக்களை
திரும்பிப் பாருங்கள்
அன்றாட வாழ்வே
அவர்களுக்கு அல்லல் !

விழாக்கள்
வருவது
வாழ்க்கையில்
வழக்கமானது !
வீழ்ந்துக் கிடப்போர்
தாழ்ந்தவர் என்பது
பிரிவினை பேதமன்றோ !

பக்தியுள்ளோர்
பரவசப்படுவது
வாடிக்கை இன்றும் !
பகுத்தறிவோர்
பரிதாபப்படுவது
இயற்கை என்றும் !

ஆனாலும் ,

வறுமையில் வாடும்
மனித இனங்களை
நினைத்திடுங்கள் !

ஒருவேளை சோறும்
ஒதுங்கிட இடமும்
இல்லாத நிலை !
ஆதரவற்றோர்
அகம் மகிழ
உதவுங்கள் !

பசியில்லா
சமுதாயம்
படைத்திட
சபதம் ஏற்போம் !
இல்லாதார்
இல்லாத உலகம்
நிலைத்திட
வேண்டும் !

முதியோர்
இல்லமிலா
முற்போக்குக்
கொள்கையுடன்
பயணிப்போம் !

கட்டளையில்லை
கருணை காட்டிடுவீர் !
ஆணயிடவில்லை
ஆதரவு அளித்திடுவீர் !
வேண்டுகோள்
வைக்கிறேன்
வையத்தில்
ஒருவனாக !

அன்போடு
கேட்கிறேன்
அகிலத்தில்
ஒருவனாக !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (18-Oct-20, 7:43 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 379

மேலே