இறைவன்

காலமெல்லாம் காதல் காதலென்றே போனமனம்
வாலறிவன் பாதங்களைத் தேடாது - இன்று
நோய்கள் பற்றி ஊனினை உலுக்கும் போது
அப்போதும் இந்த காற்றடைத்த பையைக் காக்க
இறைவன் நாமம் துதிக்க மனம்நாட
அப்போதும் உன்னை ஏற்கிறான் இறைவன்
தாயைப்போல கருணாசாகரன் அவன் அவன்
நாமம் மட்டுமே உன்வாயினில் உதிக்க
உன்னைக் காத்திடும் அவன் நாமம்
உன்னையும் உன் உயிரையும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Oct-20, 2:16 pm)
Tanglish : iraivan
பார்வை : 206

மேலே