பெண் மானிடரில் உயர்ந்தவள் என்றும்

பெண்ணென்பவள் என்றும் எப்போதும் பூப்போல்
மென்மையானவள் அன்பின் உருவே அவளாவாள்
ஆணின் மேன்மைக்கு அவளே காரணமாவாள்
பெண்ணின்று அவனியில் ஆணில்லை பெண்ணில்
பெண்ணின் உத்திரத்தில் உதித்தெழுபவனே ஆணும்
தாய்மை அவளிடத்தில் அதுவே பெண்ணைத்
தனிப்பெரும் தெய்வமாய் அன்னையாய் உலகில்
என்றும் உலவச் செய்ய இன்று நாம்
கோயில் தேடி கும்பிடும் தெய்வங்களில்
எத்தனை அன்னையர் ... அன்னை காமாட்சி
மதுரை மீனாட்சி காசி விசாலாக்ஷி ... சிவனில்
சக்தி ஒரு பாதி ...... மானிடரே உன்னில் ஒரு
பாதி என்று நீ இன்னும் ஏற்காதது உன்மடமை
ஆயின் நீநினைத்ததை அடைய தேடிப் போய்
கும்பிடுவது எத்தனை சக்தி பீடங்கள் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Oct-20, 4:54 pm)
பார்வை : 99

மேலே