பெண்ணைப் பேயென்பதோ

காயெனப் பூவெனக் காய்கறி போலக்
-காதலைச் சமைத்துளம் கவர்ந்தவன் பசிக்கு
பாயெனும் இலைதனைப் பாங்குடன் விரித்துப்
-பரம்பரை நாணப் பன்னீர்த் தெளித்து
தாயென வாகிடத் தன்னையே பந்தியில்
-தந்திட வந்தவள் தன்னையே வாயால்
நாயெனப் பேயென நாளுமே திட்டி
-நலிவுறச் செய்வது நல்லதுக் காகுமோ?

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (18-Oct-20, 1:53 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 153

மேலே