அவனுக்கென்ன
அவனுக்கென்ன !
ஒற்றை வார்த்தையை
ஓங்காரமாய் வீசிவிட்டு
சென்று விட்டான்
"அவனுக்கென்ன"
ஐயகோ தமிழே
இந்த வார்த்தையில்
தெரிகிறதே அவனின்
ஆயிரம் எண்ணங்கள்
அடிவயிற்றில் இருந்து
எழும்பிய மனித
எண்ணங்கள்
பொறாமையா?
கோபமா?
வருத்தமா?
அவனை போல்
ஆகாத இயலாமையா?
ஒற்றை
வார்த்தை சொல்கிறதே
ஓராயிரம் மனித
எண்ணங்களை