சுதந்திரம்
சுதந்திரம்
ஆசிரியப்பா
சுதந்திரம் வந்ததும் வதந்தி வந்தது
பதரினாரே திராவிடக் கும்பல் பார்த்ததும்
விதவிதமாய் தமிழென்றும் திராவிட னென்றும்
நித்தம் நித்தம் பிள்ளைகள் மனங்கெட
புத்தி மாற்றி சலவைசெய்து கெடுத்தாரே
பற்றி யெரியப் பெற்றோரின் வயிறும்
தற்குறி களானாரே நல்லப் பிள்ளைகளும்
யோசிக்கக் நேரமில்லா சினிமா கூத்தென
தற்குறி யானாரே அடங்காப் பிள்ளைகளும்
பெற்றோர் காலில் பிள்ளை விழலும்
அற்றுப் போனது தமிழர் நாட்டில்
கற்றுத்தந் தார்கருணா நிதிகாலில் விழவும்
சற்றும் சளைக்கா விழுந்தார் காலில்
பொசுக்கென அவனவன் காலில் விழுகிறான்
போடாபோ இதில்லைசுய மரியாதை
பொல்லாப் பாவியின் காலில் விழுவதேனோ