கனவு காணுங்கள்

கனவு காணுங்கள்
😩😩😩😩😩😩😩😩
கொரோனா நடத்திய கோர ஆட்டம்
கோவிந்தன் வாழ்விலும் பெரிய மாற்றம்

முகரிமை மிக்க இளைஞன் வாழ்வு
முயற்சிக்குத் தடையாய் இயற்கை நிகழ்வு

ஓவமாய் பதிந்த மனதின் நினைவு
ஓவியாவை அவன் கைப்பிடித்தல் கனவு

பழனம் பகைத்து பாவிப் பயலோ
பணம்தனை ஈட்ட கடைதனை வைத்தான்

நூழிலர் வேடம் சிறப்பாய் போட்டும்
நூறு நாளில் ஊரடங்காக்கும்

கடைகள் திறக்க தடைகள் தொடர
காலம் தந்தது இழிஞன் பட்டம்

கடனும் வட்டியும் கவ்விக் கொள்ள
கனவை உடைத்தே நொவ்வல் வெல்ல

வறுவிலியாக வாழ்வின் நிலைமை
வந்து தேற்ற யாருமிலாக் கொடுமை

ஆறு மாத அடையல் வாழ்விலும்
அதிர்ஷ்டம் தந்தது அப்புடையல் வேளை

வானம் முழுக்க மங்குல் கூட
வந்தது பாருங்க பிடுகும் மழையும்

மதுகையோடு ஏர் கலப்பை தூக்க --நெல்
மணிகள் குவிந்தது நூறாம் நாளில்

உடனே

ஓவியாவை அடைதல் கனவில்
ஒக்கல் கூடி சிக்கல் தீர்த்தது.

க.செல்வராசு
கபிலக்குறிச்சி
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

எழுதியவர் : க.செல்வராசு (23-Oct-20, 5:22 am)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : kanavu kaanunkal
பார்வை : 281

மேலே