பூத்தலில் இறுதி நிலை

ஆற்றலின் பிறப்பிடம் அருவ மனமேயாம்
மனதின் திட எண்ணம் மகத்துவத்தின் இடமேயாம்
இடவலம் பார்த்துச்சென்றால் இலக்கை அடையலாம்
அடையும் இடம் நமக்கு அடையாளமாய் இருத்தல் நலம்

நலம் என்பதின் பொருள் நன்மைகளால் நிரம்புதலே
நிரம்பும் நல்லெண்ணம் நிறைவை கொடுத்துவிடும்
கொடுத்து வாழ்பவர்களால் கோள புவி செழிக்கிறது
செழிப்பை பெறும்போது செறுக்கு களைதல் வேண்டும்

வேண்டியோர் உடனிருந்தால் விண்ணையும் தொடலாமே
தொடுவது நல்லது பயத்தால் தொடருதலும் நன்மையே
நன்மையை ஆராய்ந்தால் அது நம்மை காக்கும் கவசம்
கவசத்தின் கோட்பாடு கலங்காது வைத்திருத்தல்

வைத்திருக்கும் செல்வமே வையகத்தில் மதிப்பாகும்
மதிப்பு என்பெதெல்லாம் மதியுள்ளோர் போற்றுதலே
போற்றுவோர் நிலைத்தொடர புதுச்சிந்தனை பூத்தலே
பூத்தலில் இறுதி நிலை பெரிய மாற்றம் காணுதலே

காணும் யாவற்றையும் கைக்கொள்ள நினைக்கும் மனம்
மனதின் மகத்துவே மாற்றங்களுக்கு அடிச்சுவடு
அடிச்சுவட்டை ஆராய்ந்தால் அற்புதங்கள் தெரிந்துவிடும்
தெரிந்ததில் தெளிவடைந்தால் தோல்வியே இல்லையாம்.
-------- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (23-Oct-20, 9:49 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 40

மேலே