கனவுகளுடன் என் பயணம்🚶🚶🚶

ஆண்டு பல கடந்து
தாய்நாடு திரும்பினேன்
கனவுகள் பல சுமந்து ...

வந்து இறங்கியதும்
வரவேற்க ஆச்சிரியங்கள்
பல காத்திருந்தது ..

விமான நிலையம் விட்டு வெளிவர
என் உடமைகளை பிடிங்கி கொண்டு
எங்கே செல்ல வேண்டும் ??,
என் வாகனத்தில் ஏறுங்கள்
என போட்டிபோட்டு
என்னை இழுத்து செல்ல
ஒருவர் கூட வரவில்லை...!!

என் கண்ணில் பட்ட
வாடகை வாகனத்தில்
ஏறி நான் பயணிக்க,
என் கண்ணில் பட்டது எல்லாம் விநோதமாகவே இருந்தது ..

செல்லும் வாகனங்கள் எல்லாம்
ஒன்றன் பின் ஒன்றாக எறும்பு போல்
அழகாக அணிவகுத்து சென்றது...!!
சாலை எங்கும் ஹாரன்
சத்தமின்றி ஒருவித அமைதி இருந்தது !!
அத்தனை பெரிய நகரத்திலும்
காணும் இடம் எல்லாம் சோலைகளாக நிறைந்திருந்தது!!

தலை கவசம் இல்லாத
வாகன ஓட்டிகள் இல்லை,!!
வாகனம் ஒட்டிக்கொண்டே
கைபேசியில் எவரும் பேசவுமில்லை!!
எந்த வாகனத்தில் இருந்தும்
துளியளவு புகை வெளியேறவில்லை!!
ஒருவரை ஒருவர்
முந்தி செல்ல முயலவும் இல்லை,!!
இரண்டு பக்கம் வரும்
சுவர்களில் சுவரொட்டி இல்லை,!!
தலைவர் வாழ்க என்ற வாசகம்
ஏந்திய ஆளுயர பேனர்களும் இல்லை ,!!
சிக்கனலில் சிக்காமல் செல்லும்
வாகனம் தென்படவில்லை ,!!
நிற்கும் வாகனத்தில் வந்து
யாசகம் கேட்க யாரும் இல்லை,!!
நடை பாதை மீது
ஒரு கடை கூட கண்ணில் படவில்லை ,!!
செல்லும் சாலையில் எந்த
இடத்திலும் குப்பை மேடுகளோ,
தோண்டி மூடாமல் இட்ட குழிகளோ இல்லவே இல்லை ..!!
பிறர் மீது படுமே என்று
பாராமல் எச்சில் துப்ப ஆள்ளில்லை!!
தன் கையில் உள்ள குப்பையை குப்பை தொட்டிவிட்டு தெருவில் ஒருவரும் வீசவில்லை!!
தெருவோரா சண்டை இல்லை!!
சக மனிதர்களை பாதிக்கும்
ஊர்வலங்கள் இல்லை..!!
அமைச்சர் வருகைக்காக பொது மக்கள்
நிறுத்த படவில்லை!!
நிற்கும் பேருந்தில் ஏற எவரும்
முண்டி அடித்து ஓடவில்லை!!
ஓடும் பேருந்தில் எவரும் படியில்
தொங்கி கொண்டு பயணிக்கவில்லை!!
நிழல் தரும் மரங்கள் ஒன்று கூட
சாலை ஓரம் வெட்ட படவில்லை..!!
ஊருக்குள் ஓடும் நதியில்
துறு நாற்றம் வரவில்லை!!
குளங்களும்..கண்மாய்களும்
காணாமல் போகவில்லை..!!
என்னைக் கொண்டு சென்ற ஓட்டுனர் என்னிடம் பேரம் பேசவே இல்லை!!

இது என் பாரதம் தானா என்று
என்னால் நம்ப முடியவில்லை...!!
இதுவன்றி சொர்க்கம் வெருண்டோ என்று தோணவில்லை..!!

இன்பத்தில் நான் மூழ்கிருகும் வேளையில்
'சார் உங்க இடம் வந்திருச்சு' இரங்கவும் என்ற சத்தம் கேட்டு ,
திடுகிட்ட பின் தான் தெரிந்தது நான் கண்டது கனவு என்று..😟

ஏக்கத்துடன் இறங்கி நின்ற
சில நிமிடங்களில் யாரோ ஒருவர்
எறிந்த குப்பை என் உடல் பட்டது😨
சாலையில் சென்ற வாகனம்
கக்கிய புகை என் நுரையீரல் தொட்டது😨
சாவுகிராக்கி ஓரமா போ
என யாரோ ஒரு புண்ணியவான்
என் கண்கள் திறக்க...
என் பாரதம் அது மாறாதா..???😟😨

கனவுகளுடனும் கண்ணீருடனும்
நடை பாதையில் நடக்க வழியின்றி
என் கை சுமைகளுடனும்...
மன சுமைகளுடனும்
என் கால்கள் பயணிக்கிறது....

என்றும்....என்றென்றும்...
ஜீவன்❣️

எழுதியவர் : ஜீவன் (20-Oct-20, 6:19 am)
சேர்த்தது : Ever UR Jeevan...
பார்வை : 248

மேலே