காலண்டர்

காலண்டர்

வாழ்க்கையின் கழித்தல்கள்
காட்டும் கண்ணாடி

சிறிய காகிதம்
இருபத்தி நாலு
மணிநேரம்
அடங்கிய கட்டம்

அனைத்துமதங்களின்
பண்டிகைகள்,
நாளும் நேரம் பிரித்து
நல்லது கெட்டது
காட்டும் ஊமை.

ஒரு தாள்
கிழித்து எறிந்தால்
வாழ்க்கை
நேற்றைய நாள்

நாட்கள் கடப்பதை
உணர்த்தும் காலச்சுவடு

ஒவ்வொரு நாளின்
சரித்திரங்களை
தனக்குள் புதைத்து
வைத்திருக்கும்
கால பெட்டகம்

பூமி சுற்றுவதை
கண்ணால்
காணாவிடினும்
காகிதத்தால் உணர்த்தும்

நமது வயதை சாயத்தால்
மறைத்தாலும்
ஞாபகப்படுத்தும்
மாய கண்ணாடி

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (23-Oct-20, 3:01 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 61

மேலே