appaa

1. அம்பிகையே ஈஸ்வரியே மெட்டு
தந்தை உந்தன் தாள் மலரைப்
போற்றிப் பாடித் தேடி நாளும் ஓடி வந்தேன் நான்
தாழ்மையுடன் வேண்டி நிதம்
வாழ்த்திப் பாடும் பாடல்களை ஏற்றருள்வாய்…(தந்தை)

பாசமுடன் நாளும் நாளும் பேணிவளர்த்தாய்
பல பண்புகளைப் புகட்டி என்னைப் பாதுகாத்தாய்(2)
பலவாறு துன்பங்களை ஏற்றபோதிலும்…..
பெரிதாகக் காட்டிடாடமல் பாசம் காட்டினாய்(தந்தை)

வேண்டியதைத் தேடித் தேடி நாளும் நல்கினாய்….
சிறிது வெறுப்பேதும் காட்டிடாமல் வாரி அணைத்தாய்(2)
வேதனைகள் அடுத்தடுத்து உற்ற போதிலும்…………….
அதனை வெளிக்காட்டாப் பெருந்தகை உனக்கீடு ஏதப்பா(தந்தை)

அன்புடன் ஸ்ரீ விஜயலஷ்மி
கோயம்புத்தூர் 22

எழுதியவர் : ஸ்ரீ விஜயலஷ்மி (28-Oct-20, 9:41 pm)
பார்வை : 2045

மேலே