பட்டம் வாங்களையோ பட்டம்
பட்டங்கள் பெற்றார்கள் பார் ஆண்ட வேந்தர்கள்
செங்குருதி சொறிவினால் சில நாடுகள் தம்பிடியில்
செல்வத்தை கவர்ந்ததுண்டு சிறப்பாக ஆண்டதுண்டு
செங்கோலின் தரம் செழிக்க தீரமாயும் ஆண்டார்கள்
தாம் வென்ற பகுதிகளை தம்முயிராய் நினைத்தார்கள்
அம்மக்கள் துயர்த்தீர்க்க ஆண்டவனையும் எதிர்த்தார்கள்
மக்களின் மனங்கவர்ந்த மன்னவர்களுக்கும் பல பட்டம்
மானத்தை காத்து நின்ற மன்னவர்களுக்கும் பல பட்டம்
உயிரனங்கள் துயர்த்தீர்த்த மன்னவர்களுக்கும் பல பட்டம்
கடல் வழி சென்று வென்ற பேரரசனுக்கு பெரும் பட்டம்
கயமையாய் வென்று நின்ற கரவடருக்கும் ஒரு பட்டம்
கண்டதில் கேட்டதில் படித்ததில் பட்டங்கள் பலவகையே
காலத்தின் சுழற்சியால் இன்று கரடு முரடாய் பட்டங்கள்
கொலை கொள்ளைகாரனுக்கும் கோள் மூட்டுபவனுக்கும்
காமத்தால் கோமாரி கண்டவனுக்கும் கடத்துபவனுக்கும்
கையேந்தி பிழைப்பவனிடம் களவாடுபவனுக்கும்
காரிருள் எண்ணங்கொண்ட வெள்ளை ஆடையனுக்கும்
அற்புத அரசியல்வாதிக்கும் ஆனந்த ஆன்மிகவாதிக்கும்
அநாயாசமாய் தவறிழைக்கும் அனைவருக்குமே
அழகாக பட்டங்கள் சூட்டப்படுதலே அற்புத நிகழ்வாய்.
----- நன்னாடன்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
