பாட்டி😭

பாட்டி😭

மனசு வலிக்குதுங்க
மானங்கெட்ட மனிதர்களை நினைத்தா
நான் கண்ட காட்சிய பார்த்தா
மனம் ஒன்று இருந்தா
அறுந்து விழுந்திடுங்க
குக்கிராமம்
ஒரு ஓலை குடிசை
ஒரு கிழவி
அவ உடம்பு உடைந்த வளையல்
கந்தல் சேலை உடுத்தி
தாத்தா விளையாடிய
அவள் இடையில்
இன்னமும் காசுயில்லாத
சுருக்கு பை
வெத்தல போட்ட அவ வாய்
காவி உடுத்தி
அவ அதை துப்பின
இடமெங்கும் சிதறிகிடந்த ஓவியங்கள்
கைதி போல் படுத்திருந்தா
கை அகல குடிசையில்
ஆதரவற்று கிடக்கும்
ஓர் அனுபவ கூடு
நோய் வந்து இவ படுத்தா
ஆண்டவன் தான் வரனும்
ஒரு வேளை அவனே
வைத்தியத்துக்கு
காசு கேட்டா
அவ சுருக்கு பைய தான்
நோண்டனும்.
ஒளவை பாட்டி
ஒரு வேளை
உயிருடன் இருந்தா
அவளுக்கும் இந்த கெதி
தானோ?
- பாலு.

எழுதியவர் : பாலு (28-Oct-20, 10:24 pm)
சேர்த்தது : balu
பார்வை : 109

மேலே