கண்ணாடி பூ

கண்ணாடி பூ

கண்ணாடி பூ
கவிதை எழுதுகிறது
சிந்தனையை ஓடவிட்டேன்
சிறகடித்து பறந்தேன்
உலகமெல்லாம் சுற்றினேன்
ஊர்கோல மேகங்களாய்
சுதந்திர பறவையாய்
அடுபங்கரையில் இருந்து கொண்டே
கற்பனையில்
ஆணாத்திக்க ஆட்சியால்
சிந்தித்த எண்ணங்கள்
சின்னாபிண்ணம் ஆனது
சீறிய கனவுகள்
சீறழிந்து போனது
கூட்டு குடும்பம் என்ற
சுதந்திர வேட்கையில்
எத்தனையோ தில்லையாடி வள்ளியம்மைகள்
அதில் நான் மட்டும் அல்ல
எத்தனையோ சகோதரிகள்
அண்ணன் வந்து விடுவார்
சுடுதண்ணி சீக்கரம் வைடி
அம்மாவின் அவசர குரல்
தம்பிக்கு காலேஜ் நாளையில் இருந்து
சட்டை பேண்ட் எல்லாம் துவச்சிட்டியாடி
அப்பாவின் வீன் அதிகாரம்
பெரிய அண்ணன் குடும்பம் ஊரில்
இருந்து லீவுக்கு வருகிறார்கள்
தடபுடலா சமையல் பண்ணிடு என்ன
சின்ன அண்ணனின் சுயநலம்
காரணம் அண்ணியிடம் பெயர் வாங்க
அப்போது தானே அவள் தங்கையை
அவன் சயிட் அடிக்கலாம்
உன் தங்கச்சி உட்கார்ந்துட்டாடி
குறைச்சு, குறைசச்சு கூப்பிட்டாலும்
தெரு ஆளுங்களே ஐம்பது பேர் தேருவாங்க
எல்லாத்தையும் நீ தாண்டி சட்டுபுட்டுன்னு பண்ணணும்
விறகு அடுப்பில் வெந்து
வேகாத வெய்யிலில் அலைந்து
பம்பரமாய் சுழன்று
அத்துனையும் செய்து
ஆர அமர அமர்ந்து சாப்பாட்டில்
கை வைத்து தான் பாக்கி
பெரியளே! அப்பா நம்மல விட்டு
போயிட்டாருடி
அம்மாவின் அடிவயிற்று அழுகுரல்
ஆன்மாவை உலுக்க
குடும்பம் சில நாட்களில்
சிதறிய தேங்காய் என
ஆகிவிட
வயாக்கானம்
தத்துவம்
பேசிய உடன் பிறப்புகள்
சுயநலபுலிகளாக மாற
செக்கிழுத்த சிதம்பரமாக
சிற்பம் வடித்த சிற்பியாக
கிழட்டு கழுதையாக
ஓய்ந்து போன குதிரையாக
ஏமாற்றப்பட்ட ஏமாளியாக
பராமரிக்க படாத
பட்ட மரமாக
தனி ஆளாக
தத்தளிக்கிறேன்
கண்ணாடி பூவாய்
இல்லை காய்ந்த சருகாய்...

- பாலு.

எழுதியவர் : (28-Oct-20, 10:31 pm)
சேர்த்தது : balu
Tanglish : kannadi poo
பார்வை : 99

மேலே