தீராத காதல் தணியாத மோகம்
கண்ணால வந்த காதல்
நெஞ்சோடு சேர்ந்ததென்னு
சொப்பனத்தில் பாய் போட்டேன்
சொக்கனுக்கு பக்கத்துல நானே
அப்பனுக்கு வடிச்ச கஞ்சி
அத்தனையும் குடிச்ச பின்னும்
என் பசி அடங்கலையே ராசா
அற்புதமே நீதானே ராசா
மஞ்சளுக்கு வச்ச நாத்து
மனசெல்லாம் நிறஞ்சதுன்னு
தூதுவிட்டு காத்திருக்கேன்
மஞ்ச பூசி விட உன்ன
எதிர்பாத்திருக்கேன் நானே
ஆளான நாள் முதலா மூடிவச்ச
ஆசையெல்லாம் செவந்து போக
உன் ஒத்தடம் போதுமையா
சாமத்திலும் பூத்திருப்பேன் நானே
ஆட்டுக்கிடை பக்கத்துல
ஆவாரம்பூ மரத்தடியில் காண்டா
விளக்கு ஏத்தி தனிச்சிருக்கேன்
உச்சி குளிரு தின்னும் முன்னே
வந்துவிடு போத்திக் கொள்ள ராசா...