கார்த்திகை காதல்
உன் வார்த்தைகள்
என்னை சுடுவதும் முறையோ
உன் மௌனங்கள்
என்னை கொல்வதும் சரியோ
செவ்விதழ் தீண்டிய
ஞாபகம் நினைப்பதும் தவறோ
தேன்மழை நேரத்தில்
நாம் நனைந்ததும் பிழையோ
கைவளை ஒலிகளில்
உன் சிரிப்புகள் கேட்பதும் கனவோ
கை விரல்களால் தேகத்தில்
உன் தடம் தொடர்வதும் சுகமோ
கரும்புச்சாறின் சுவை மனதில்
இன்னும் நீரோடையாய்
விளக்கணைக்கும் இரவில் இன்னும்
திரியுடன் நெய்யுடன் போராட்டமாய்
துயில்கிறேன் துவழ்கிறேன்
தினந்தோறுமே ஏங்குதல் தகுமோ
கதைகள் பேசிய காலங்கள்
கண்ணீரில் ஆறுதல் ஆகுமோ
உனக்காகவே உயிர் வாழ்கிறேன்
என நாம் சொல்வோம் இதமாய்
பிரிவுகள் இனிமேலும் வேண்டாம்
காதலை தொடர்வோம் வரமாய்
நல்லநேரம் கையோடு இருந்தும்
நாம் விலகி சென்றதும் விதியோ
விட்டுக்கொடுக்க மனம் இருந்தும்
பிடிவாதம் தொடர்வதும் முறையோ!!