உன் கவிதை நான்
நீயொரு கவிஞன் எனும்போது...
என் மௌனத்தின் மொழியை
எப்படியெல்லாம்
சிந்தனை செய்திருப்பாய்
என் விரல்களை தீண்டாத
போதிலும் என்னைத் தழுவியதாய்
நினைத்து குழந்தையாய்
எத்தனைமுறை சிரித்திருப்பாய்
காமத்தை முன்னிறுத்தாத
கவிதைகளை எழுதிக்கொண்டு
எத்தனை இரவுகளில்
தூங்காமல் கண்விழித்திருப்பாய்
தவநிலையில் ஒரு படிநிலையாய்
எப்படியெல்லாம் என்னை
நினைத்து பூஜித்திருப்பாய்
பாமாலை சூட்டியிருப்பாய்
அமைதியும் நிம்மதியும்
என்னிடம் மட்டுமே கிடைக்குமென்று
எப்பொழுதெல்லாம்
என் மடி தேடியிருப்பாய்...
என் மடி தேடியிருப்பாய்...