நகைச்சுவை துணுக்குகள் 29

அவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.

ஏங்க? இப்பதான் அவர் அரசியலைப்பத்தியோ, அரசியல்வாதிகளைப் பத்தியோ எதுவுமே எழுதறது இல்லை. எந்த ஜாதியைப்பத்தியும்,
மதத்தைப் பத்தியும் கூட எழுதறதே இல்லியே. அப்படி இருக்கும்போது அவரை ஏன் அரெஸ்ட் பண்ணணும்?

இந்த மாதிரி யாரையும் புண்படுத்தாம ஒரு எழுத்தாளர் எழுதறார்னா, அதுலே ஏதோ ஒரு உள்நோக்கம் அவருக்கு இருக்குன்னுசொல்லி அவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.
**********************
 யார் அவர்? பேச ஆரம்பிச்சா பேசிக்கிட்டே இருக்கார். இப்போதைக்கு முடிக்க மாட்டார் போல இருக்கே.

ஓ! அவரா? அவர் T.V.யிலே மெகா சீரியல் எழுதரவராச்சே..
*****************
இது எப்படிங்க நியாயம்?

எதைச்சொல்றீங்க?

நான் என்ன சிகிச்சை கொடுத்தாலும் நோயாளி பிழைக்கிறது ஆண்டவன் கையிலேதான் இருக்குன்னு சொல்லிகிட்டு, சிகிச்சைக்கான ஃபீஸை மட்டும் இந்த டாக்டர் வாங்கிக்கிறாரே, அதைச்சொன்னேன்.
**********************
 நான்கு பெண்கள் தங்கள் பிரசவ அனுபவத்தைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். பிரசவத்திற்கு முன்பு தாங்கள் பார்த்த படத்தைப்பற்றி பேச்சு வந்தது. அப்போது
முதல் பெண்: நான் ஒற்றை ரோஜா படம்பார்த்தேன். எனக்கு ஒரு குழந்தை பிறந்தது.

இரண்டாவது பெண்: நான் இரு மலர்கள் பார்த்தேன். எனக்கு இரட்டைக குழந்தைகள் பிறந்தன.

மூன்றாவது பெண்: நான் மூன்றாம்பிறை பார்த்தேன். எனக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன.

நான்காவது பெண்: நான் உண்டாகி இருக்கிறேன். ஐயோ எனக்குப்பயமாக இருக்கிறது. நான் இப்போ பார்த்த படம் அலிபாபாவும் 40 திருடர்களும்.
( நல்ல வேளையா யாரும் 1000 தலைவாங்கி அபூர்வ சிந்தாமணியைப் பார்க்கலை)

எழுதியவர் : ரா.குருசுவாமி ( ராகு) (29-Oct-20, 6:56 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 102

மேலே