விம்மி சுவைத்து
அருவக் காற்றாய் அனைவரையும் அரவணைத்து
எப்பலனும் எதிர் நோக்காமல் வானப்புனலாய் காத்து
கதிர் வளர்க்கும் உயிராய் காலந்தோறும் இருந்து
பேதமை இல்லா மேநிலை நிலமாய் பொறுமையாய்
யாரெது செய்யிணும் புறந்தள்ளும் நீள் மரமாய் நின்று
ஈரப்பத காற்றிலே வாழ்வை வளப்படுத்தும் அருகாய்
எங்கு வளர்ந்தாலும் தம்முள் மருந்தீனும் வேம்பாய்
அனைத்துயிர் துயர்களைக்கும் சேவகனாய் உயர்ந்து
அறிவில் செறிவுற்று விம்மி சுவைத்து தெளிவடைந்து
தென்னைக் கனியின் இணையாய் சுவைப்பெற்று
மண்ணில் நல் பெயரை நிலைநாட்டி புகழடைந்து
நீல் வானத்துரத்திற்கு பெயரோடு நாட்டை நீளுயர்த்தி
வாழ்தலில் கிடைக்கும் பெருமை நெஞ்சந்தின் நிம்மதி.
----- நன்னாடன்