கவிஞன்

கவிஞன்

கவிஞனாய் இருப்பதால் - நான்
காதலை ரசிப்பதைப் போல்
என் கவலைகளையும் ரசிக்கிறேன்
கவிதைகளாய் எழுதி.
***
சாலையில் நடக்கும்போதும்
மிக கவனமாய் இருக்கிறேன்.
எனது கற்பனையில் உதிக்கும்
கவிதை வரிகள் கலையாமல் இருப்பதற்காக.
***
கையோடு காகிதமும் பேனாவுமாக
கண்ட இடத்தில் எல்லாம் நிற்கிறேன்.
மனதில் கணத்திருக்கும் கவிதை வரிகளை
மறக்காமல் இறக்கி வைப்பதற்கு.

எழுதியவர் : கவி இராசன் (4-Nov-20, 1:07 am)
சேர்த்தது : கவி இராசன்
Tanglish : kavingan
பார்வை : 733

மேலே