உதிக்கும் கதிர்
உதிக்கும் கதிர் உருவானபோதே உயிர் பெற்ற மொழி
ஊற்றுக் கண் போலே உருவானது தமிழ் மொழி
ஊழிகாலத்திலும் ஓங்கி அரசண்டது எம் மொழி
உயிர்களின் உன்னத ஒலி வெளிப்பாடே இம்மொழி
உள்ளார்ந்த அர்த்த செறிவுமிக்கது பொன் மொழி
உவகையை கொடுத்து உலகை ஆண்ட மென்மொழி
உதிர அணுக்களைப் போல் இலக்கண முறை கண்டது
உலக உயிர்களின் பால் பெரும் வாஞ்சை கொண்டது
உருவில்லா உணர்வுகளுக்கும் உரிமை கொடுத்தது
ஊமை உணர்வையும் மேன்மையாய் கூறும் மொழி
உலக்கையால் தாக்குவது போல் உபதேசிக்கும் மொழி
ஊறின்றி வேறு மொழியை உருவாக்கிய உயிர்மொழி
உபத்திரம் பலவகையிலும் உரத்தோடு வளர்ந்த மொழி
உண்டியின்றி உழைத்தோரால் உயர்ந்த ஆதி மொழி
உதாசிக்கும் ஒவ்வொருக்கும் உதவிய வான் மொழி
உருண்ட பூமிக்கு உயிர் உதிரமாம் எம் தமிழ் மொழி
------ நன்னாடன்.