சிவமே தமிழ்

யாக்கை கூடு பலவித கற்பிதம்
மையச் சிறப்பே சொர்க்கவாசம்
சிவமே மூழ்கி திளைக்க
சில்வண்டு ரீங்காரம் பெரும்தவமே

அங்கயற்கண்ணி தடாதகை
மீனாட்சி பரிபாலன பள்ளியறை
நாடும் நாயக சிவமே
நற்கதி அடையும் பெரும்செயலே

ஆலவாய் முதற்றமிழ் தலைவன்
முத்தாடும் முன்னெடுப்பு
வான்நோக்கு செலுத்தும் அதிகாரம்
சிவமே ஆவுடையார் பிரதிபலிப்பு

களமாடும் கார்த்திகை நாயகன்
கட்டித்தழுவி எடுத்தியம்பும்
இல்லறமும் சிவமே முதற்பணி
அச்சிலேறும் அலங்கார பார்வதி

உணர்ந்தார் மெச்சும் சிவமே
உயிர்விதைக்கும் உயர்உழவு
பெருந்திரள் தோள்இயக்க
உதிரப்பூ உயிர்ப்பூ தனவானாம்!

எழுதியவர் : மேகலை (8-Nov-20, 1:37 am)
சேர்த்தது : மேகலை
பார்வை : 169

மேலே