கிராமத்து திண்ணை
ஓர் மாலை பொழுது
எனது கால்கள்
தலை நகரத்தில் ஓர்
தெருவை கடந்த படி...
அங்கே
வரிசையாய் வீடுகள்
அடைக்கபட்டிருந்தது
சுற்று சுவருக்குள்…
தெரு சாலை முழுவதும்
மின் விளக்குகள்
மெதுவாய் ஒளிர தொடங்கியது....
குடிநீர் குழாய் உடைந்து
சிறு குழிகள் தோறும்
தண்ணீர் குமுளிகள்...
பல வகை அழகு செடிகள்
சில வகை பூக்களை
தலையில் சுமந்து
வீடுகளின் முன்னே....
ஒவ்வொரு வீட்டின்
நுழைவாயிலிலும்
வாகனங்கள்
ஒன்றும் இரண்டுமாய்....
வண்ணங்களாய் எரியும்
மின் விளக்குகள்
வசதிக்கு ஏற்றால் போல்
ஒவ்வொரு வீட்டிலும்....
வாசலுக்கு வெளியே
குழந்தைகள் விளையாட
வீட்டின் உள்ளே
தூங்கி கொண்டிருந்தது நாய்....
அனைத்து வசதிகளும்
அந்த தெருவில்
வசதியான வாழ்க்கை
அவர்களின் கையில்....
கண்ணில் பட்டதை அனைத்தையும்
பார்த்து கொண்டு நான் நடக்கையில்
மண்ணில் பட்டென்று விழ தொடங்கியது மழைத்துளி.....
கையில் குடையில்லை
தலை நனைய
முகம் துடைத்து
மழைக்கு ஒதுங்க இடம் தேடினேன்....
தெருமுழுதும் வீடுகள்
ஆனால் ஒதுங்கத்தான்
ஒரு வீட்டுக் சுற்றுசுவர் கதவும் திறந்திருக்கவில்லை.....
முழுவதும் நனைந்த பின்
நினைவுக்கு வந்தது
கிராமத்து வீட்டு திண்ணையின் அருமை....