ஆயுதம் எடு!!!!!!!!!!!!!
உன்
கண்ணின் முன்னால்
மன்னிக்க முடியாத
தண்டனைக்குரிய குற்றம்.
செய்பவனோ
அரசியல்வா[வியா]தி -
அவன்
கண்ணின் முன்னால் - உன்னை
மன்னிக்க மாட்டேன்,
தவறுணர்ந்து சரண் அடை
என்று பார் -
இன்றைய இந்தியனே.
மறு நொடி அந்த
குற்றம் - உனக்கிழைக்கபடும்.
பல நாள் - உடல் வருத்தி
உண்ணா நோன்பிருந்தார் - நம்
அன்னா ஹசாரே - என்னாயிற்று?
இன்றும் புலம்புகிறார் -
மத்திய அரசு - எமற்றிவிட்டதாம்.
இதுவே ஒவ்வொரு
தீவிரவாதிகளும்
சாதிக்கும் வெற்றிகள் எப்படி?[தவறான காரணத்திற்காய் அவர்கள் செய்வது]
கந்தகார் முதல்
சத்ரபதி நிலையம் வரை?[இதை நியாயம் எனவில்லை, அவர்கள் வெற்றி எதனால்?]
ஆயுதம் எடு -
நாட்டை சூரையடுபவரை
இனம் கண்டு எதிர்.
மாறாக -
அவர்கள் முன்னால்
உன் உரிமையை
உன் நாட்டு முன்னேற்றத்தை
உன் சந்ததியின் வாழ்வாதாரத்தை
மண்டி போட்டு கேட்காதே.
சத்தம் போட்டு கேள் - உன்
சத்தம் சத்தங்களாக - வெற்றியின்
சந்தங்களாக மாறும்.
புதிய சமுதாயம் படைப்போம்.