"மனைவியை நேசிப்பவரானால்=உங்களுக்கு பிடிக்கும்"


அன்னை...உனக்கு வாழ்கையை பரிசளித்தால்,
மனைவி... பரிசாக வந்த வாழ்க்கை..,

நீ உன் வாழ்க்கையை உலகத்தில் வாழ்வாய்,
அவள் உன்னையே உலகமாய் நினைத்து வாழ்வாள்,

நீ வாழ்விலே உயர நினைப்பாய்,
அவள் உயர்வே நீ தான் என்றிருப்பாள்..,

அன்னையை பொறுத்தவரை
அவள் தீட்டிய கவிதை நீ...

மனைவி... உன்னால் தீண்டப்பட்ட கவிதை...

மொத்தத்தில்....

உன் வறுமையிலும்..
உன்னுடன் வரும் மயில்....

மனைவி.........

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (22-Sep-11, 8:00 pm)
சேர்த்தது : நா சதீஸ்குமார்
பார்வை : 436

மேலே