குமரியன்னை மூக்குத்தி

தெய்வீகமானது மூக்குத்தி அன்று
தெய்வ குமரியம்மன் அழகு மூக்கில்
மூக்குத்தியாய் அலங்கரித்த அன்று
தன்ஒளியால் ஒளிபரப்பினாள் குமரியன்னையும்
மானிடர் மனதின் இருள் போக்கிட
அங்கு ஆழ்கடலில் திசை தெரியாது
தத்தளித்த மாலுமிக்கு ஒளிதந்து கரை
சேர இன்றும் கண்ணியவள் குமரி அன்னையாய்
சக்தியாய் பார்கவியாய் தமிழக
தென்கோடியில் இந்நாட்டிற்கே காவல் தெய்வமாய்
நான் என்றும் வணங்கும் குமாரி தெய்வமாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Nov-20, 7:28 pm)
பார்வை : 131

மேலே