உன்னருகே நானிருந்தால்
கல்லூரி பாதையிலே..
நீ நடந்து போகயிலே....
மரங்கள் உனக்கு சாமரம்
வீசையிலே......
உன்
மல்லிகை மனம்
என் நாசிக்குள் நுழைந்து
கொள்ளுதடி......!!!
வீர மங்கையாய் நீ
நடக்க......
உன் பின்னே
தளபதியாய்
நான் நடக்க.......
நம் இருவரையும் மேகங்கள்
கடக்க......
அம்மேகங்களிலிருந்து
வெடித்து சிதறும்
பூ மழையும் ......
உன் புன்னகையும்.....
என்னை கரைத்தெடுக்கிறதடி ........!!!
மின்னலை மிஞ்சும் உன்
கண் சிமிட்டலில்....
என் உடலில்
அணு கரு பிளவை
உண்டாக்கி சென்றடி....!!
உன் மோக கூந்தலில்
காற்றின் வேகமும்
குறைந்து.....
கார் கூந்தலின்
இருட்டில் கொஞ்சி விளையாடி....
என்னை கொள்ளுதடி.....
~ செல்வகுமார்~