முத்த அலை

உன் பாதம் முத்தமிட
உருண்டு வருவதும்
முத்தமிட்ட பின்
அடங்கிச் செல்வதும்
மீண்டும் பாதம் தழுவ
பாய்ந்து வருவதும் .........
என்னைப் போலவே
அலைகளுக்கும்
உன் மீது
காதல் ஓய்வதில்லை
அது
என்றும் மாய்வதில்லை

எழுதியவர் : சித்திரவேல் அழகேஸ்வரன் (11-Nov-20, 12:54 pm)
Tanglish : mutha alai
பார்வை : 161

மேலே