ஹைக்கூ

விலக்க நினைத்தும்
விலக மறுக்கிறது இரும்பா இதயம்?
அவள் விழிகள் காந்தம்!
***

கரு கொண்ட கற்பனை
வளருகிறது கவிதையாய்
பிறக்கிறாள் ஒவ்வொரு வரியிலும் அவள்!
***

அவள் நினைவுகள் எழ
கண்ணீர் தூவி வரவேற்கிறது இதயம்
தனிமை!
***

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (16-Nov-20, 7:14 pm)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
Tanglish : haikkoo
பார்வை : 624

மேலே