பாதுகாப்பு பாதிப்பு
விழுப்புரத்திலிருந்து சேலம் செல்கையில்
20.11.2020 இன்று சோதனைகள் சாலையில்
இறுதியான ஆட்சிக்காலத்தில் இன்னலாய் அது
இரு வழிப்பாதைச் சாலையிலே எதற்கு தடுப்போ
பத்து நிமிடத்தில் கடக்கும் முதல்வருக்கு
பாதை தோறும் பாதுகாப்பு அபத்தமானதே
அறிவுள்ளோரின் ஆன்மா வலிமையானதாகும்
அறம் தவறும் எச்செயலுக்கும் மருந்தில்லை உலகில்
காலைக்குத்தும் முற்கள் கடுமையாய் களையப்படும்
அதிகாரம் ஆற்றல் மிகுந்தது என்றாலும்
அளவில்லாமல் ஆர்ப்பரித்தால் அதலபாதாளத்துள்
ஆளும் வளரணும் அதனூடே அறச்செயலும் வளரணும்
பூமி சுழல்வதை பாதுகாப்புக்கு நிறுத்த முடியுமோ
- - - நன்னாடன்