பூஜ்யஶ்ரீ
ஏன்டி முல்லை,; நீ உன் பேரை மாத்திட்டயாமே?
@@@@@@@
ஆமாம் அக்கா.
@@@@@@@
ஏன்டி தீடீர்னு உம் பேரை மாத்தின?
@@@@@@
என் படிப்பு முடிய இன்னும் ஒரு வருஷம் இருக்குது. முதல் வகுப்பில தேர்ச்சிபெற கடுமையா உழைக்கிறேன். வீட்டில எந்த வேலையும் செய்யறதில்ல. என் பாட்டி என்னை எப்பப் பாந்த்தாலும "ஒதாவக்கர, ஒண்ணுக்கும் ஒதவதாவ"னு என்னைத் திட்டாறங்க. என் வகுப்புத் தோழி ஒருத்தியோட அப்பா வழக்கறிஞரா இருக்கிறார். அவருகிட்ட சொல்லி எம் பேரை அதிகாரப் பூர்வமா மாத்திட்டேன் அக்கா. பூஜ்யம்ன்னா (Zero) ஒண்ணுமில்லனுதானே அர்த்தம். 'பூஜ்ய'த்தோட 'ஶ்ரீ' -யைச் சேத்து வச்சு 'பூஜ்யஶ்ரீ'னு என் பேரை மாத்திட்டேன். 'முல்லை'ங்கிற என் பேரு தமிழ்ப் பேரு. என் வகுப்புத் தோழிங்க பேரெல்லாம் இந்திப் பேரு. என் பேரு மட்டும் தமிழ்ப் பேரு. இந்தக் காலத்தில பெரும்பால தமிழர்கள் அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேரைத்தானே வச்சிருக்காங்க. என் பேரு நல்லா இருக்குதா அக்கா.
@@@@@@@@
'பூஜ்யஶ்ரீ' ரொம்ப அருமையான பேருடீ. "வாட் எ ஸ்வீட் நேம்".
@@@@@@@
"தேங்கஸ் அக்கா".
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
திரைத் தமிழைத் தவிர்ப்போம். இனிப்பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் தமிழ்ப் பெயர்களைச் சூட்டி பெருமிதம் கொள்வோம்.
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
Pujyashri = respectable