கப்பல் பறவை

அழைப்பு மணியை அழுத்திய மறு நொடி அம்மா கதவு திறக்க மகள் சக்தியுடன் நான் உள்ளே நுழைந்தேன்.
சக்தி என்னை வினோதமாய்ப் பார்க்க கண்களால் என்ன என்றேன்."பாட்டி வீட்டுக்கு வந்தால் நீ புதிதாய்த் தெரிகிறாய் அம்மா" மகள் கொஞ்சினாள்.எத்தனை வயதானால் என்ன? பெண்களுக்கு அம்மா வீடு என்றுமே சொர்க்கம் தான்,என் முகமும் உடல் மொழியும் காட்டிக் கொடுத்ததை
எண்ணி சின்னச்சிரிப்புடன் அம்மாவை பின் தொடர்ந்தேன்.
அப்பாவுக்கு தெரிய வேண்டாம் என்று ஆயிரம் சத்தியங்களுடன் ,"பழைய பல்லவி திரும்ப துவங்கிட்டார் அம்மா"என்றேன் சலிப்புடன்.மகளின் வாழ்வு சிறப்பாக இல்லை எனதெரிந்தால் அப்பா உள்ளுக்குள் உடைந்து விடுவார் என்பதால் அம்மாவிடம் ரகசியமாய் அழுதேன்.தலை கோதி ,"கவலை படாதே,படித்த படிப்பு வீணாகாமல் அவர் சொல்வது போல் வேலைக்கு சென்றால் அவருக்கும் நாலு காசு சேர்க்க உதவியாக இருக்கும் .நாளைக்கு தம்பிகளிடம் பேசலாம் , இப்போ சாப்பிட்டு நிம்மதியா தூங்குமா, என்றதும் கொஞ்சம் தெளிவு பெற்றேன்.
மறுநாள் சான்றிதழ்களுடன் நிறைய நம்பிக்கையுடன் சென்னைக்கு பயணித்தோம் .என்னைப் பெற்ற அன்னையும்,நான் பெற்ற மகளும் தூக்கத்தில், நான் மட்டும் நினைவுகளை அசை போட்டு துக்கத்தில்.கணவரின் வார்த்தைகள் தந்த ஆறாத ரணங்களின் தீராத வலி ஒரு புறம், ஏற்ற ஒரு வேலை கிடைக்கவில்லையே என்ற கவலை மறுபுறம்,தூக்கம் என்னை விட்டு தூரம் ஆனது. அவருடைய உழைப்பில் உண்பதாக அவர் சொல்லும் போது
என் ரோஷம் அடக்கி கண்மணி சக்தியை கரைசேர்க்க ,அவள் நிம்மதி யாக படிப்பு தொடர அத்தனையும் தாங்கி கொண்டேன்,எல்லா பெண்களையும் போல.வடியாத வெள்ளம் என்று எதுவும் இல்லை,விடியாத இரவென்று எதுவுமில்லை....பாடல் காற்றில் மிதந்து வர விடியும் என்ற நம்பிக்கையில் நானும் கண் அசந்தேன்.
அம்மாவின் யோசனைப்படி பெரிய தம்பியின் வீட்டிற்கு சென்று சின்னவனை அங்கு வரச்சொல்லி
ஒரு முடிவு எடுக்கலாம் என பெரியவன் வீட்டிற்கு சென்றோம். விசாரிப்புகள்,உபசரிப்புகள் முடிந்து அம்மா பேசத்துவங்கினார்.சில நிமிடங்கள் மௌனங்களில் கரைந்தன.
அந்த அமைதி எனக்கு புதிதாக எதயோ உணர்த்தியது.பெரியவன்,""நான் சொன்னால் உடனே நல்ல வேலை கிடைத்து விடும்,சக்தியையும் நல்ல ஒரு கல்லூரி யில் சேர்த்து விடலாம், ஆனால் நான் யாரென்று உங்களை அறிமுகம் செய்வேன் ?""என்று கூறி யோசித்தான். கோடீஸ்வர தம்பிக்கு அக்கா வேலைக்கு போவது அசிங்கமாக உணர்ந்தான்.முதல் முறையாக எங்களுக்குள் அந்தஸ்து பேதம் உணர்ந்தேன்,அவன் கை கழுவியது
புரிந்து அம்மா சின்னவன் சூர்யாவை
பார்க்க ,"அக்காவின் தகுதிக்கு வேலை கிடைத்து விடும், ஆனால் மாமா வேலை மாற்றலாகி வரும் வரை வளர்ந்த பெண்ணுடன் அக்கா எங்க தங்கும்?".அம்மா ,"சில நாட்கள் உங்களுடன்...." அம்மா முடிக்கு முன் தம்பியின் மனைவி இடைமறித்து ,அது சரியா வராது,அன்பு கெட்டு போகும்," என்றதும் அதை ஆமோதிப்பது போல் தம்பியும் அமைதியாக இருந்தான்.
நான் உள்ளே சென்று ஊருக்கு திரும்ப தயார் ஆனேன்.என் மிகப்பெரிய தகுதியே தன்மானம் எனத்தெரிந்தும்
அம்மா அங்கே,"உனக்கு தொந்தரவா இருக்க மாட்டா,உன் குழந்தைக்கு பாடம் சொல்லி தருவா,உனக்காக என்னிடம் பரிந்து பேசும் அவள் குணம் உனக்கு தெரியுமே, ,...இன்னும் என்னைப்பற்றி எனக்காக சிபாரிசு செய்து கொண்டே........

எழுதியவர் : இவானா (19-Nov-20, 4:14 pm)
சேர்த்தது : இவானா
Tanglish : kappal paravai
பார்வை : 205

மேலே